
சி.பவித்ரா, சக்குர்பூர், டில்லி: உற்சாகமாக இருக்க...
நல்ல விஷயங்களை எப்போதும் நினையுங்கள்.
வி.சுகுமார், எழுமலை, மதுரை: தலைமை பதவி கிடைக்க...
சபையின் நாயகரான நடராஜரை வழிபட்டால் தலைமை பதவி கிடைக்கும்
எம்.அருள், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: புனித நீராடல் என்றால்...
திருத்தலங்களில் உள்ள தீர்த்தம், கடல், ஆற்றில் குளிப்பது.
பி.அழகுராஜ், ஆண்டிபட்டி, தேனி: மாசியில் பெண் குழந்தை பிறந்தால் யோகமா…
எந்த மாதமாக இருந்தாலும் பிறந்த நேரத்தை பொறுத்தே யோகம் அமையும்.
ரா.இசக்கி, இடைகால், தென்காசி: வேதாந்தம் என்றால் என்ன?
வாழ்க்கை நெறிகளை போதிக்கும் அறிவுரை.
சே.கோமல், ஹலசூரு, பெங்களூரு: திதி, நட்சத்திரம் எத்தனை?
திதி 15 (பிரதமை - பவுர்ணமி /அமாவாசை)
நட்சத்திரம் 27 (அசுவினி - ரேவதி)
கு.விஸ்வா, வில்லிவாக்கம், சென்னை: கோயிலுக்குச் செல்ல குளிக்க வேண்டுமா?
குளித்த பின் கோயிலுக்கு செல்வது நல்லது.
ரா.ஆதித்யா, அருவங்காடு, நீலகிரி: பிறரின் திருமணத்திற்கு உதவினால் என் மகளுக்கு தாலி பாக்கியம் கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும். உங்கள் சந்ததிக்கும் நன்மை.
மு.திருப்பதி, இடையர்பாளையம், புதுச்சேரி: மொட்டை போடுவது போல் கனவு வந்தால்...
வேண்டுதல் இருந்தால் உடனே நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்.