
மே 16 வைகாசி 2: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. காரைக்குடி கொப்புடையம்மன் கைலாச வாகனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி.
மே 17 வைகாசி 3: ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் திருமஞ்சனம். காஞ்சிபுரம் வரதராஜர் உபய நாச்சியார்மார்களுடன் பவனி.
மே 18 வைகாசி 4: முகூர்த்த நாள். திருவோண விரதம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். தென்னை, மா, பலா, புளி வைக்க நல்ல நாள்.
மே 19 வைகாசி 5: முகூர்த்த நாள். சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
மே 20 வைகாசி 6: அகோபிலமடம் 27வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
மே 21 வைகாசி 7: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனம். கரிநாள்.
மே 22 வைகாசி 8: சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.