
மே 23 வைகாசி 9: முகூர்த்த நாள். ஏகாதசி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
மே 24 வைகாசி 10: பிரதோஷம். திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.
மே 25 வைகாசி 11: மாத சிவராத்திரி. அகோபிலமடம் 39வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம். கழற்சிங்க நாயனார் குருபூஜை.
மே 26 வைகாசி 12: அமாவாசை. கார்த்திகை விரதம். ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர். திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காட்டியருளல். திருச்செந்துார், பழநி, விராலிமலை முருகன் புறப்பாடு.
மே 27 வைகாசி 13: புன்னாக கவுரி விரதம். சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல். திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்.
மே 28 வைகாசி 14: முகூர்த்த நாள். அக்னி நட்சத்திரம் முடிவு. சந்திர தரிசனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.
மே 29 வைகாசி 15: ரம்பா திரிதியை. மாதவி விரதம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.