
மே 30 வைகாசி 16: கதளீ கவுரி விரதம். சதுர்த்தி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லித் தாயார் பவனி. மிலட்டூர் விநாயகர் புறப்பாடு. நம்பியாண்டார் நம்பி குருபூஜை. கரிநாள்.
மே 31 வைகாசி 17: மாயவரம் கவுரி மாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், திருப்பத்துார் திருத்தளிநாதர், நயினார் கோவில் நாகநாதர், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், திருப்புகலுார் அக்னீஸ்வரர், காஞ்சி குமரக்கோட்டம் முருகன் ஆகிய தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். நமி நந்தியடிகள் நாயனார், சேக்கிழார் குருபூஜை. கரிநாள்.
ஜூன் 1 வைகாசி 18: ஆரண்ய கவுரி, சஷ்டி விரதம். உத்தமர்கோவில் சிவபெருமான் சூரியபிரபையில் புறப்பாடு. திருமோகூர் காளமேகப்பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் உற்ஸவம் ஆரம்பம். சோமாசி மாற நாயனார் குருபூஜை.
ஜூன் 2 வைகாசி 19: சிவகாசி விஸ்வநாதர் திருக்கல்யாணம். மதுரை கூடலழகர், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூன் 3 வைகாசி 20: திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், காட்டுப்பரூர் ஆதிகேசவப்பெருமாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள், பழநி முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். உத்தமர்கோவில் சிவபெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
ஜூன் 4 வைகாசி 21: திருப்பத்துார் திருத்தளிநாதர், காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சன்னதியில் ஒன்பது கருட சேவை. இன்று காலை 9:58 - 10:34 மணி வரை கோயில், மனை, மடம், கிணறு வாஸ்து செய்ய நன்று.
ஜூன் 5 வைகாசி 22: முகூர்த்த நாள். பாபஹர தசமி. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதர், திருப்பத்துார் திருத்தளிநாதர் ரிஷப சேவை.

