
ஜூலை 11 ஆனி 27: திருத்தங்கல் அப்பன் குதிரை வாகனம், தாயார் பூப்பல்லக்கில் பவனி. அகோபிலமடம் 13வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கு.
ஜூலை 12 ஆனி 28: திருவோண விரதம். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு.
ஜூலை 13 ஆனி 29: முகூர்த்த நாள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.
ஜூலை 14 ஆனி 30: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. திருத்தணி முருகன் பால் அபிஷேகம். இன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நல்ல நாள்.
ஜூலை 15 ஆனி 31: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
ஜூலை 16 ஆனி 32: முகூர்த்த நாள். தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். அகோபிலமடம் 23வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
ஜூலை 17 ஆடி 1: சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தேவகோட்டை ரங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.