
சா.சஞ்சனா, வண்டலுார், காஞ்சிபுரம்: கந்தசஷ்டி கவசம் என்றால்...
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது.
சொ.மீனாட்சி, திருமங்கலம், மதுரை: குழப்பம், பிரச்னை போக்கும் சிவத்தலத்தை சொல்லுங்கள்.
மதுரை, திருவண்ணாமலை
வி.பகவதி, குமாரபுரம், கன்னியாகுமரி: மந்திரங்களை தினமும் எத்தனை முறை ஜபிக்கலாம்?
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம்.
ஆர்.கோவிந்த், பாகூர், புதுச்சேரி: கண் நோய் தீர...
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள்.
பி.நித்தியா, கோயம்புத்துார்: வழக்கில் உள்ள பரம்பரை சொத்து கிடைக்க...
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள்.
யா.பரத், உடன்குடி, துாத்துக்குடி: அடிக்கடி கனவில் யானை பிளிறுகிறது. நல்லதா...
நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுங்கள்.
சிவ.குருநாதன், உத்தமபாளையம், தேனி: மனைவி கர்ப்பமாக இருக்கும் போது என் முதல் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?
செலுத்தலாம்.
மு.ராம்சரண், நந்திமலை, பெங்களூரு: சிவன் கோயிலில் முப்பழ அபிஷேகம் எப்போது நடக்கும்?
ஆனி பவுர்ணமியன்று மா, பலா, வாழைப்பழ(முப்பழம்) அபிஷேகம் சிவனுக்கு நடக்கும். இதை தரிசிப்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும்.
எம்.பார்வதி, எழும்பூர், சென்னை: மரணத்திற்கு பின் மனிதனை தொடர்வது எது?
புண்ணியம், பாவம்.