தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இனி வேண்டாம் தடுமாற்றம்

இனி வேண்டாம் தடுமாற்றம்

இனி வேண்டாம் தடுமாற்றம்


ADDED : ஜூன் 27, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருஞான சம்பந்தரின் தேவாரத்தை தினமும் பாடுங்கள்.

முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,

ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,

செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனுாரானைப்

பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்

விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்

அரவம் அணிந்தானை, அணி ஆப்பனுாரானைப்

பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்

பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்

அரவம் அணிந்தானை, அணி ஆப்பனுாரானைப்

பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்

துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,

அணியும் புனலானை, அணி ஆப்பனுாரானைப்

பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,

நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,

அகரமுதலானை, அணி ஆப்பனுாரானைப்

பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,

காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்

ஆடும் தொழிலானை, அணி ஆப்பனுாரானைப்

பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,

கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,

இயலும் இசையானை, எழில் ஆப்பனுாரானைப்

பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,

உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,

அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனுாரானைப்

பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்

அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்

எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனுாரானைப்

பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.

செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,

பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை

ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனுாரானைப்

பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

அம் தண்புனல் வைகை அணி ஆப்பனுார் மேய

சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,

நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்

சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us