தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 15, 2025 12:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 12:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 18 ஆடி 2: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.அழகர்கோவில் சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கரிநாள்.

ஜூலை 19 ஆடி 3: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லி அம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.

ஜூலை 20 ஆடி 4: ஆடிக்கார்த்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். திருத்தணி முருகன் தெப்பம்.

ஜூலை 21 ஆடி 5: ஏகாதசி விரதம். அகோபிலமடம் 22வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. திருவாடானை சிநேகவல்லியம்மன் காமதேனு வாகனம்.

ஜூலை 22 ஆடி 6: பிரதோஷம். நத்தம் மாரியம்மன் பூந்தேர். சிவன் கோயில்களில் மாலை நந்தீஸ்வரர் அபிஷேகம்.

ஜூலை 23 ஆடி 7: மாதசிவராத்திரி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சேஷ வாகனம், ரங்கமன்னார் கோவர்த்தனகிரியில் பவனி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் பவனி, கூற்றுவ நாயனார் குருபூஜை.

ஜூலை 24 ஆடி 8: ஆடி அமாவாசை. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் ஐந்து கருட சேவை. வத்ராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருவிழா. அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி பூ அலங்காரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us