sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 15, 2025 11:55 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு.தீபா, அருப்புக்கோட்டை, விருதுநகர்: கர்ப்பிணிகள் எத்தனை மாதம் வரை கோயிலுக்கு செல்லலாம்?

குழந்தை பிறக்கும் வரை தீட்டு உண்டாகாது. அதுவரை கோயிலுக்கு செல்லலாம்.

எம்.ராமநாதன், மதுராந்தகம், செங்கல்பட்டு: ஆடியில் குழந்தை பிறந்தால்…..

தவறில்லை. எல்லா குழந்தைகளையும் போல நலமுடன் இருப்பார்கள்.

ஏ.ராதிகா, சின்னசேலம், கள்ளக்குறிச்சி: இரவில் கோயில் குளத்தில் நீராடக் கூடாதா...

கூடாது. ஆனால் கிரகணத்தின் போது நீராடலாம்.

யா.கோகிலா, சுரண்டை, தென்காசி: குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன ஹோமம் செய்யலாம்?

சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி ஹோமம், திருவோணத்தன்று சுதர்சன, லட்சுமி ஹோமம் நடத்துங்கள்.

ந.அக் ஷயா, அருவங்காடு, நீலகிரி: சுவாமி கும்பிடும் போது கைகள் எப்படி இருக்க வேண்டும்?

இரு கைகளையும் மார்புக்கு நேராக சேர்த்தபடி இருக்க வேண்டும்.

தி.வரதராஜன், வத்தலக்குண்டு, திண்டுக்கல்: நவக்கிரகத்தை எந்த கிழமையில் வழிபட வேண்டும்?

சனிக்கிழமை.

வி.ராகவன், வில்லுக்குறி, கன்னியாகுமரி: ஹிமாசல பிரதேஷ் அம்மனான ஜ்வாலாமுகியை வழிபட்டால்...

திருஷ்டி, தீவினை, தடங்கல், கிரக தோஷம் நீங்கும்.

எஸ்.ரம்யா, கால்காஜி, டில்லி: திரிசங்கு சொர்க்கம் என்றால்...

உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பியவர் மன்னர் திரிசங்கு. அவருக்காக விஸ்வாமித்திரர் இதை படைத்தார்.

ரா.மதுசூதனன், திருநள்ளார், புதுச்சேரி: என் முயற்சியில் தடங்கல் ஏற்படுகிறதே...

முன்னோர் சாபமாக இருக்கலாம். அவர்களின் ஆசி கிடைக்க ராமேஸ்வரத்தில் திலஹோமம் நடத்துங்கள்.






      Dinamalar
      Follow us