
செப்.26 புரட்டாசி 10: திருப்பதி பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி. மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ருக்மணி, சத்தியபாமாவுடன் கிருஷ்ணர் அலங்காரம். மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அலங்காரம். திருமலை நம்பி திருநட்சத்திரம்.
செப்.27 புரட்டாசி 11: உபாங்க லலிதா கவுரி விரதம். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனம்.
செப்.28 புரட்டாசி 12: சஷ்டி விரதம். குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் சிம்ம வாகனம், மகிஷாசுரமர்த்தினி கோலம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் சேஷ வாகனம்.
செப்.29 புரட்டாசி 13: சரஸ்வதி ஆவாஹனம். ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் யானை வாகனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
செப்.30 புரட்டாசி 14: கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். திருப்பதி பெருமாள் காலையில் சூரியபிரபையிலும், இரவில் சந்திர பிரபையிலும் பவனி.
அக்.1 புரட்டாசி 15: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, மகாநவமி. பூஜைக்கு நல்ல நேரம்: காலை 11:00 - 12:00 மணி. ஏனாதி நாயனார் குருபூஜை. திருப்பதி பெருமாள், திருவஹீந்திரபுரம் வேதாந்த தேசிகர் தேர்.
அக்.2 புரட்டாசி 16: விஜயதசமி, திருவோண விரதம். வேதாந்த தேசிகன் திருநட்சத்திரம், ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம். கரிநாள். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் கோயில் தேர்.