
எம்.ஊர்வசி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: தாலி நிலைக்க...
வெள்ளிதோறும் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அதை நெற்றி, தாலியில் இடுங்கள்.
ஆர்.ரமாபிரபா, பூவரசன்குப்பம், விழுப்புரம்: இந்தக் காலத்தில் தர்மத்தை பின்பற்ற முடியுமா...
மனநிம்மதியுடன் வாழ எந்த காலத்திலும் இதை பின்பற்றுங்கள்.
ஏ.சரளா, திருமங்கலம், மதுரை: முதியவர்களை இளைஞர்கள் புறக்கணிக்கலாமா...
கூடாது. நமக்கும் இது எதிர்காலத்தில் வரும் என்பதை உணர வேண்டும்.
வி.மனோரமா, ஊட்டி, நீலகிரி: விநாயகருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?
தடைகள் விலகி விருப்பம் நிறைவேறும்.
பி.சச்சு, கம்பம், தேனி: தர்மம் தலை காக்கும் என்பது சரிதானா?
சரியானது தான். இதற்கு ராமாயணம், மகாபாரதத்தில் உதாரணம் உள்ளது.
மா.காந்திமதி, மேலுார், துாத்துக்குடி: நவக்கிரகத்தை எப்போது வழிபடலாம்?
மூலவரை வழிபட்டபின் நவக்கிரகத்தை வழிபடுங்கள்.
ஏ.மதுரம், ராமமூர்த்தி நகர், பெங்களூரு: விரும்பிய வரன் அமைய...
கார்த்திகை மாத திங்கட்கிழமை அன்று சிவனுக்கு விரதம் இருங்கள்.
எல்.ஜெயந்தி, பேயன்குழி, கன்னியாகுமரி: ஆன்மிக ரீதியாக வெற்றிலையின் சிறப்பைச் சொல்லுங்கள்?
மகாலட்சுமி அம்சம் வெற்றிலை. இதை நைவேத்யம் செய்து பாக்குடன் சேர்த்து சாப்பிட்டால் வளமாக வாழ்வீர்கள்.
எம்.சரோஜா, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: ஆத்மா, ஞானம் இரண்டும் ஒன்றா?
இல்லை.ஆத்மா - உயிர்.
ஞானம் --அறிவு.