sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 27, 2025 11:33 AM

Google News

ADDED : நவ 27, 2025 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.28 கார்த்திகை 12: மைதுாலாஷ்டமி. சுவாமிமலை முருகன் ஆட்டுக்கிடா வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் சேஷ வாகனம். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.

நவ.29 கார்த்திகை 13: பழநி முருகன் புறப்பாடு. திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகப்பெருமாள் திருமஞ்சனம். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

நவ.30 கார்த்திகை 14: முகூர்த்த நாள். திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர். திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல். அகோபிலமடம் 45வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.

டிச.1 கார்த்திகை 15: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் சிவன் சங்காபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள்.

டிச.2 கார்த்திகை 16: பிரதோஷம். பரணி தீபம். திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்.

டிச.3 கார்த்திகை 17: திருக்கார்த்திகை. திருவண்ணாமலை தீபம். அண்ணாமலையார் ஜோதி ஸ்வரூபமாய் மகாஜோதி தரிசனம். திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர். திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம். பழநி முருகன் தீப உற்ஸவம். கரிநாள்.

டிச.4 கார்த்திகை 18: பவுர்ணமி. பாஞ்சராத்திர தீபம். திருவண்ணாமலை அண்ணாமலையார், சந்திரசேகரர் தெப்போற்ஸவம். நத்தம் மாரியம்மன் லட்ச தீபம். அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். கணம்புல்லர் நாயனார் குருபூஜை.






      Dinamalar
      Follow us