ADDED : நவ 27, 2025 11:22 AM

டிசம்பர் 3 - திருக்கார்த்திகை
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.
* கார்த்திகை தீபத்தன்று காலையில் ஏற்றும் தீபம் பரணி தீபம்.
* அருணாசலம் என்பதன் பொருள் சிவந்த மலை
* திருவண்ணாமலை உற்ஸவர் பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர்.
* கார்த்திகை அகல்தீபம் என்னும் அஞ்சல் முத்திரை 1997 டிச.12ல் வெளியானது.
* அருணகிரிநாதர் கிளி வடிவில் முக்தி பெற்ற கோபுரம் கிளி கோபுரம்.
* சிவன், முருகன், சூரியனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை.
* அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
* திருஞான சம்பந்தர் பாடிய தேவார பதிகங்களில் ஒன்பதாம் பாடலில் அண்ணாமலையாரை பற்றியதாக இருக்கும்.
* முருகன் பாடலான பழநி திருப்புகழில் 'தீபமங்கள ஜோதி நமோ நம' என அண்ணாமலையாரை பற்றி பாடப்பட்டுள்ளது.
* ஆடிப்பூரநாளில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடக்கும்.
* திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் சிவலிங்க வழிபாடு தொடங்கியது.
* புராண காலத்தில் மகாசிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்.
* சிலை பிரதிஷ்டையின் போது அஷ்ட பந்தனம் என்னும் மருந்து சாத்துவது வழக்கம். இங்கு சொர்ண பந்தம் என்னும் தங்கத்தை வைத்து லிங்கத்தை நிறுவியுள்ளனர்.
* விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் ஆகியோர் வழிபட்ட சிவ லிங்கங்கள் இங்குள்ளன.
* 25 ஏக்கர் பரப்பில் ஏழு பிரகாரத்துடன் அமைந்த தலம் அண்ணாமலை.
* திருவெம்பாவை என்னும் பாவை நோன்பு பாடல்களை மாணிக்கவாசகர் இத்தலத்தில் எழுதினார்.
* திருக்கார்த்திகையன்று அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.

