தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 27, 2025 11:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 11:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ரவி, முருகப்பாக்கம், புதுச்சேரி: அசைவம் சாப்பிட்ட அன்று கோயிலுக்கு செல்லலாமா...

கூடாது. பாவத்தைச் செய்ய அனுமதி கேட்கிறீர்களே... மறுநாள் கோயிலுக்கு செல்லுங்கள்.

பி.கனகராஜ், அரசரடி, மதுரை: வேல்மாறல் என்றால்...

வேலை ஏந்திய முருகப்பெருமானே என்னைக் காப்பாற்று' என வேண்டி, பாடுவது இது.

வீ.கனகவள்ளி, குரோம்பேட்டை, சென்னை:தாமரைத்தண்டு திரியில் விளக்கு ஏற்றினால்...

முன்வினை பாவம் தீரும். கடன் பிரச்னை குறையும்.

கே.பி.மனோகரன், சூலுார், கோயம்புத்துார்: கோயிலில் பக்தர்கள் தரும் பிரசாதத்தை சாப்பிடலாமா?

சுவாமியை தரிசித்த பின் சாப்பிடலாம்.



ர.சிவராமன், ராமமூர்த்தி நகர், பெங்களூரு: ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தடை ஏற்படுகிறதே...

உங்கள் குறைகளை சரி செய்யுங்கள். கடவுள் அருளால் பணி கிடைக்கும்.

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: சித்தர்கள் வழிபாட்டை எந்த வயதில் தொடங்கலாம்?

ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் தொடங்கலாம்.

இ.செல்வம், சங்கரன்கோவில், தென்காசி: ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால்...

குடும்பம் தழைக்கும். புண்ணியம் சேரும்.

ஈ.மாணிக்கம், பழநி, திண்டுக்கல்: புதுமணத் தம்பதி மலைக்கோயிலுக்கு செல்லக் கூடாதா...

திருமணமாகி ஆறு மாதத்திற்கு பிறகே செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us