
டிச.19 மார்கழி 4: அமாவாசை. அனுமன் ஜெயந்தி. மதுரை கூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் பரத்துவ நிர்ணயம் செய்தருளல். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். சுசீந்திரம், நங்கநல்லுார், விழுப்புரம் ஆஞ்சநேயர் அபிஷேகம். தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம்.
டிச.20 மார்கழி 5: பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்ஸவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
டிச.21 மார்கழி 6: சந்திரதரிசனம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் பகல் பத்து உற்ஸவம். சாக்கிய நாயனார் குருபூஜை. கரிநாள்.
டிச.22 மார்கழி 7: திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் திருமொழி திருநாள் தொடக்கம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வேணுகான கண்ணன் திருக்கோலம்.
டிச.23 மார்கழி 8: திருவோண விரதம். திருமோகூர் காளமேகப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பகல் பத்து உற்ஸவம். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
டிச.24 மார்கழி 9: சதுர்த்தி விரதம். ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்ஸவம் ஆரம்பம். கும்பகோணம் சாரங்கபாணி, திருச்சேறை சாரநாதப்பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. கரிநாள்.
டிச.25 மார்கழி 10: பிள்ளையார் நோன்பு. சஷ்டி விரதம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருஇந்தளூர் பரிமளரங்கநாதப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதப்பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்ஸவம். சிதம்பரம், திருநெல்வேலி, சங்கரன்கோவில், குற்றாலம், வீரவநல்லுார் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்.

