
ஜன.9 மார்கழி 25: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். இயற்பகை நாயனார் குருபூஜை.
ஜன.10 மார்கழி 26: மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருமோகூர் காளமேகப்பெருமாள், திருச்சேறை சாரநாதப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.
ஜன.11 மார்கழி 27: கூடாரை வெல்லும் உற்ஸவம். அஷ்டமி பிரதட்சணம். மதுரை செல்லத்தம்மன் உற்ஸவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் சகல ஜீவராசிகளுக்கு படியருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்தங்கி சேவை. அகோபிலமடம் 4வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
ஜன.12 மார்கழி 28: திரைலோக்ய கவுரி விரதம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சனம். மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை. சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்.
ஜன.13 மார்கழி 29: அகோபிலமடம் 30, 40வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், குரங்கணி முத்துமாலையம்மன், திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு.
ஜன.14 மார்கழி 30: ஏகாதசி விரதம். போகி. சபரிமலை மகரஜோதி தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தங்கப்பல்லக்கில் பவனி. மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.
ஜன.15 தை 1: பொங்கல். உத்தராயணப் புண்ணிய காலம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை. மதுரை மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்தருளியக்காட்சி. கரிநாள்.

