தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 15, 2026 02:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 02:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன.16 தை 2: பிரதோஷம். மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினம். மதுரை கூடலழகர் கோயிலில் கனுஉற்ஸவம் ஆரம்பம். கல்லிடைக்குறிச்சி, திருமொச்சியூர், சூரியநயினார் கோவில், திருவாவடுதுறை கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருவண்ணாமலை திருவூடல் உற்ஸவம். கரிநாள்.

ஜன.17 தை 3: மாதசிவராத்திரி. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கருட வாகனம். அரியக்குடி சீனிவாசப்பெருமாள், காட்டுப்பரூர் ஆதிசகேசவப்பெருமாள்,காரமடை அரங்கநாதருக்கு திருமஞ்சனம். கரிநாள்.

ஜன.18 தை 4: தை அமாவாசை. மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம். தென்காசி விஸ்வநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன்கோவில் சங்கரலிங்கப்பெருமாள் கோயிலில் லட்ச தீபம். மதுரை மீனாட்சி அம்மன் வைரக் கிரீடம்.

ஜன.19 தை 5: திருவோண விரதம். அகோபிலமடம் 42வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். அழகர்கோவில் கள்ளழகர் தைலக்காப்பு சம்ரோக்ஷணம். திருப்பரங்குன்றம் முருகன் உற்ஸவம் ஆரம்பம்.

ஜன.20 தை 6: சந்திர தரிசனம். அகோபிலமடம் 3வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

ஜன.21 தை 7: மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்ஸவம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தேர். திருவானைக்காவல் சிவன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

ஜன.22 தை 8: சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் விநாயகர் பவனி. சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். அப்பூதி அடிகள் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us