
ஏ.லட்சுமி நாராயணன், வாழவல்லான், துாத்துக்குடி: பெற்றோரின் பிரார்த்தனை குழந்தைக்கு சேருமா?
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.
ஆர்.ஜெயேந்திரன், வேட்டைக்காரன் புதுார், பொள்ளாச்சி: உடனடி புண்ணிய பலனுக்கு...
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்லுங்கள்.
வி.எஸ்.பவானி, பாரதிபுரம், திண்டுக்கல்: கோயிலுக்குச் செல்ல உடல் ஒத்துழைக்கவில்லை. என்ன செய்யலாம்?
வீட்டில் இருந்தபடி வழிபடுங்கள். பலன் கிடைக்கும்.
எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி: உடல் நலத்துடன் வாழ...
நீராடியதும் சூரிய நமஸ்காரம் செய்த பின், தன்வந்திரி பகவானை வழிபடுங்கள்.
ஆர்.சக்கரையப்பன், திண்டிவனம், விழுப்புரம்: பிரச்னை தீர...
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.
கே.ராகவன், சித்துராஜபுரம், விருதுநகர்: பிதுர் தோஷம் தீர...
திதி கொடுக்காவிட்டால் ஏற்படுவது இது. இதற்காக ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள்.
அ.ரவி, பெங்களூரு: கிரகபிரவேசத்தன்று கன்றுக்குட்டிக்கு பூஜை நடத்தலாமா...
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் நடத்தலாம்.
ஆர்.ராகவேந்திரன், அசோக்நகர், சென்னை: திருமண விஷயம் பேசும் போது பல்லி சப்தமிட்டால்...
மிகவும் நல்லது. நல்ல சகுனம்.
என்.தியாகராஜன், சின்னசொக்கிகுளம், மதுரை: சன்னதியின் முன் விழுந்து வணங்கலாமா?
கூடாது. கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம்.

