
ஜன.23 தை 9: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. அகோபிலமடம் 6வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை, திருவானைக்காவல் சிவன் பவனி. பைம்பொழில், குன்றக்குடி, திருவிடைமருதுார், திருப்புடைமருதுார் கோயில்களில் முருகன் உற்ஸவம் ஆரம்பம். ஹரதத்த சிவச்சாரியார் குருபூஜை.
ஜன.24 தை 10: சஷ்டி விரதம். திருச்சேறை சாரநாதர் கோயில் உற்ஸவம் ஆரம்பம். திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. கலிக்கம்ப நாயனார் குருபூஜை.
ஜன.25 தை 11: ரதசப்தமி. சூரிய சந்திர விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனம். கோயம்புத்துார் பாலதண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம். தேவகோட்டை ரெங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை. கரிநாள்.
ஜன.26 தை 12: பீஷ்ம தர்ப்பணம். வாஸ்து நாள். பூஜை நேரம் காலை 10:41 - 11:17 மணி. திருப்புடைமருதுார் முருகன் வெள்ளி ரிஷப சேவை. பழநி முருகன் கோயில் உற்ஸவம் ஆரம்பம்.
ஜன.27 தை 13: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் முருகன் சின்ன வைரத்தேர். வேலுார் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்கரதம். மருதமலை முருகன், திருவானைக்காவல் சிவன் புறப்பாடு.
ஜன.28 தை 14: முகூர்த்த நாள். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தந்த பல்லக்கு. திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
ஜன.29 தை 15: ஏகாதசி விரதம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தேர். மருதமலை முருகன் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கண்ணப்ப நாயனார் குருபூஜை.

