தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சூரியபகவானுக்கு வணக்கம்

சூரியபகவானுக்கு வணக்கம்

சூரியபகவானுக்கு வணக்கம்


ADDED : ஜன 22, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம்

வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

-திருஞானசம்பந்த நாயனார்

விண்ணார்ந்த மணிமறுகில் விரவு

மொருசகட்டிரத மிசையனாகிப்

பண்ணார்ந்த மறைமுனிவர் பாணிதரும்

பாணிகொண்டு பதுமம் பாத்துத்

தண்ணார்ந்த மதிநிலவு தாழ்சடையெம்

புக்கொளிவாழ் சயம்பு ஞானக்

கண்ணார்ந்த பேரொளிக் கதிரவனை

எதிர்பணிந்து கருத்துள் வைப்பாம்.

-இளையான் கவிராயர்

பயில்பிறவிக் கங்குன் மலப்பட மொழித்துப்

பத்தருளப் பதுமம் பூப்பக்

கயிலையுறை மருதீசன் கண்ணாகி

யுதித்தெழு செங்கதிரோன் தன்னை

அயில் விழியாள் தனந்திளைத்துக் கேவலத்தின்

முழுகுமவர்க்(கு) அகிலம் காணத்

துயில் விலக்கி வெயில் விரிக்கும் செம்பரிதிப்

புத்தேளைத் தொழுதல் செய்வாம்

-மீனாட்சிசுந்தரம்பிள்ளை

மாயிரு ஞாலங் கோத்தவல்லிருட்

படலம் வாங்கி

யாயிரம் கரத்தாற் றைவந்தனைத்

துயிர்க் கறிவீந் தன்பால்

சேயிறு விசும்பும் போற்றும்

திருநணாவுடையான் செல்வக்

கோயில் வாழி! ரவிப் புத்தேள் குரை

கழல் வணக்கம் செய்வாம்

-சுதேவ முதலியார்

துாக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்

ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற

இன்னமுது உண்டேன் என்று உந்தீபற

-வடலுார் ராமலிங்க சுவாமிகள்



செங்கதிர்த் தேவன் சிறந்த

ஒளியினைத் தேர்கின்றோம் - அவன்

எங்கள் அறிவினைத் துாண்டி

நடத்துக என்பதோர் நல்ல

மங்களம் வாய்ந்த சுருதி

மொழி கொண்டு வாழ்த்தியே!

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா! போற்றி சுதந்திரா! போற்றி

வீரியா! போற்றி வினைகள் களைவாய்

காசினி இருளை நீக்கும்

கதிரொளியாகி எங்கும்

பூசனை உலகோர் போற்றப்

புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல்

மகா கிரிவலமாய் வந்த

தேசிகா! என்னை ரட்சிப்பாய்

செங்கதிரவனே போற்றி

-தனிப்பாடல்

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற

தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி

இருள்நீக்கம் தந்தாய் போற்றி!

தாயினும் சாலப் பரிந்து சகலரை

அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்

துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

துாயவர் இதயம்போல துலங்கிடும்

ஒளியே போற்றி!

துாரத்தே நெருப்பை வைத்து

சாரத்தை தருவாய் போற்றி!

ஞாயிறு நலமே வாழ்க

நாயகன் வடிவே போற்றி

நானிலம் உள்ளநாள் மட்டும்

போற்றுவோம் போற்றி போற்றி!

-கண்ணதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us