sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 28, 2026 12:26 PM

Google News

ADDED : ஜன 28, 2026 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.சண்முகம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்: திருமணத்தில் கூரைச்சேலை உடுத்துவது ஏன்?

கூரை என்றால் 'பாதுகாப்பு'. வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய மணமகளுக்கு கூரைச்சேலை உடுத்துகிறோம்.

லோ.கலாராணி, மேடவாக்கம், சென்னை: வயதாகி விட்ட என்னால் விரதமிருக்க முடியவில்லையே...

விரதநாளில் சைவமாக சாப்பிட்டு (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்) இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.

ஏ.சிவஞானம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: *எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?

16 முதல் 70 வயது வரை விரதம் இருக்கலாம். குழந்தை, முதியவர், கர்ப்பிணி, நோயாளிக்கு விதிவிலக்கு.

ஆர்.ஆவுடைநாயகம், எட்டையபுரம், துாத்துக்குடி: *கடவுளின் பெயரை (முருகா, சிவா, ராமா) பக்தியுடன் சொன்னால்...

எண்ணம், சொல், செயலில் துாய்மை உண்டாகும்.

ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி: வாழை இலை தவிர வேறு இலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா...

மந்தாரை, புரசு, பலா, குங்கிலிய இலைகளை தைத்து பயன்படுத்தலாம்.

எஸ்.ரவி, முருகப்பாக்கம், புதுச்சேரி: காசி யாத்திரை செல்வோர் முதலில் எங்கு செல்ல வேண்டும்?

முதலில் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடல். அதை தொடர்ந்து காசி, கயா தரிசனம். மீண்டும் காசியில் பூஜைகளைச் செய்த பின் அயோத்தியை தரிசிக்கலாம்.

ஆ.விஜயலட்சுமி, செல்வபுரம், கோயம்புத்துார்: அமாவாசையை நல்ல நாள் என்கிறார்களே...

முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசை அன்று சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. ஆனால் தற்போது நல்ல நாளாக கருதி சுபவிஷயத்தை பேசி முடிக்கின்றனர்.

ர.அன்னபூரணி, பெங்களூரு: மரண பயமின்றி வாழ...

சரபேஸ்வரர், நரசிம்மர், காளி, பைரவர், வீரபத்திரர், சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.

பா.கார்த்தி, தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி: வீட்டில் பூனை வளர்க்கலாமா?

வளர்க்கலாம். அது குறுக்கும் நெடுக்குமாக போவதை சகுனத்தடையாக கருதக் கூடாது.






      Dinamalar
      Follow us