தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஏப் 15, 2026 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்.17 சித்திரை 4: அமாவாசை. திருப்பத்துார் ஜெயந்தன் பூஜை. தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.

ஏப்.18 சித்திரை 5: சந்திரதரிசனம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை.

ஏப்.19 சித்திரை 6: கார்த்திகை விரதம். பலராம ஜெயந்தி.திரேதாயுகாதி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சித்திரை திருவிழா ஆரம்பம். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். உய்யக்கொண்டார் திருநட்சத்திரம். கரிநாள்.

ஏப்.20 சித்திரை 7: முகூர்த்த நாள். சதுர்த்தி விரதம். வார்தா கவுரி விரதம். அட்சய திரிதியை. செம்பொனார் கோயில் சுவர்ணபுரீஸ்வரர், ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் உற்ஸவம் ஆரம்பம். கும்பகோணம் பன்னிரண்டு கருட சேவை. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை.

ஏப்.21 சித்திரை 8: லாவண்ய கவுரி விரதம். ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி. திருச்சி, சங்கரன்கோவில், இலஞ்சி, கடையம், திருப்பனந்தாள், திருவையாறு, சீர்காழி, திருத்தணி, திருக்கடவூர், துாத்துக்குடி தலங்களில் சிவன் உற்ஸவம் ஆரம்பம். வீரபாண்டி கவுமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம்.

ஏப்.22 சித்திரை 9: சஷ்டி விரதம். உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப்பெருமாள் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். ராமானுஜர் திருநட்சத்திரம். விறன்மிண்ட நாயனார் குருபூஜை.

ஏப்.23 சித்திரை 10: வாஸ்து நாள். காலை 8:54- 9:30 மணி வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. திருக்கடவூர் சிவன் திருக்கல்யாணம். முதலியாண்டார் திருநட்சத்திரம். கச்சியப்பர் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us