தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 15, 2026 08:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜி.ஆர், தாம்பரம், செங்கல்பட்டு: வீட்டிற்கு வரும் பெண்களுக்கு குங்குமம் கொடுத்தால்...

மகாலட்சுமியின் ஆசி நிச்சயம்.

பாஸ்கரன்.மா, எழுமலை, மதுரை: தம்பதியாக விரதம் இருக்கலாமா?

இருக்கலாம். குடும்பத்திற்கே நன்மை கிடைக்கும்.

குமார்.மு, தக்கலை, கன்னியாகுமரி: மூத்தவராக பிறந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடத்தலாமா...

நடத்தலாம்.

ஹேமலதா.எம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்: நந்திகளுக்கு பெயர் உண்டா...

மகாநந்தி, அதிகார நந்தி, விஷ்ணு நந்தி

ராஜன்.எஸ், செம்பட்டி, திண்டுக்கல்: ஹனுமனுக்கு 48 நாள் விளக்கேற்றினால்...

நன்மை நடக்கும். விருப்பம் நிறைவேறும்.

ரவி.பி, விக்கிரவாண்டி, விழுப்புரம்: இஷ்ட தெய்வத்தின் சிலையை வீட்டில் வழிபடலாமா?

வழிபடலாம். தினமும் அபிஷேகம், நைவேத்தியம் செய்வது அவசியம்.

பவித்ரா.பே, களக்காடு, திருநெல்வேலி: சாப்பிட்டபின் இலையை மூடலாமா...

சுபநிகழ்ச்சியில் மூடக் கூடாது. இறப்பு வீட்டில் மட்டும் இலையை மூடலாம்.

வினோத்.ச, ராமநகரம் பெங்களூரு: இலையின் நுனி சாப்பிடுபவருக்கு எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?

சாப்பிடுபவரின் இடதுகை பக்கம் இருக்க வேண்டும்.

யாழினி.க, மருதமலை, கோயம்புத்துார்: *சில நேரத்தில் பேசாமல் இருந்தாலும் பிரச்னை வருகிறதே...

தேவையான இடத்தில் பேசுங்கள். மற்ற இடத்தில் அமைதியாக இருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us