ADDED : ஏப் 23, 2026 12:16 PM

ஏப்.24 சித்திரை 11: மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவசமய ஸ்தாபித லீலை. துாத்துக்குடி சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம். ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் மூஷிக வாகனம். சீர்காழி சிவபெருமான் வெள்ளித் தேர்.
ஏப்.25 சித்திரை 12: திருச்சி ரத்தினாவதி அம்மையாருக்கு திருத்தாய் வழங்குதல். திருப்பனந்தாள் சிவன் ரிஷப சேவை. திருவையாறு சிவன் தன்னைத்தானே பூஜித்தல். கடையம் சிவன் இந்திர விமானம்.
ஏப்.26 சித்திரை 13: கன்னிகா பரமேஸ்வரி பூஜை. வாசவி ஜெயந்தி. மதுரை மீனாட்சிசொக்கநாதர் பட்டாபிஷேகம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் நாச்சியார் திருக்கோலம். வீரபாண்டி கவுமாரியம்மன் கருட வாகனம். திருத்தணி சிவன் புலி வாகனம். சீர்காழி சிவன், திருச்சி தாயுமானவர் திருக்கல்யாணம்.
ஏப்.27 சித்திரை 14: ஏகாதசி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக்கு விஜயம். துாத்துக்குடி நடராஜர் உருகுச் சட்டசேவை. உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி தபசுக்காட்சி. திருத்தணி சிவன் தேர். திருப்பனந்தாள் சிவன் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் சிவன் மும்மூர்த்தி தரிசனம்.
ஏப்.28 சித்திரை 15: பரசுராம துவாதசி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தேர். கரிநாள்.
ஏப்.29 சித்திரை 16: பிரதோஷம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேர். திருச்சி, கடையம், திருப்பனந்தாள், திருவையாறு, இலஞ்சி, சீர்காழி, சங்கரன்கோவில் ஆகிய தலங்களில் தேர். உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம். உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை.
ஏப்.30 சித்திரை 17: முகூர்த்த நாள். நரசிம்ம ஜெயந்தி. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை. அகோபிலமடம் 29வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம். இசைஞானியார் குருபூஜை.
