ADDED : ஏப் 23, 2026 11:53 AM

ஹரிஹரன்.எஸ், பசவன்குடி, பெங்களூரு: கருவறையின் பின்புறத்தில் தியானம் செய்யலாமா...
செய்யலாம். ஆனாலும் கோயிலில் உள்ள தியான மண்டபத்தில் செய்வது நல்லது.
சஷ்டிகா.ர, வில்லிவாக்கம், சென்னை: கலி முற்றியதன் அடையாளம்...
நல்லவர்கள் துன்பப்படுவர். மழை குறையும். மக்கள் கடமையை செய்யமாட்டார்கள்.
சங்கரி.சி, சிதம்பரம், கடலுார்: கையில் அணியும் காப்பு எந்த உலோகத்தில் இருக்க வேண்டும்?
தங்கம், வெள்ளி, தாமிரம்.
நித்ரன்.கே, பல்லடம், திருப்பூர்: கோயில் திருவிழாவை எளிமையாக நடத்தலாமா...
நடத்தலாம். அனைவரும் சேர்ந்து நடத்துவது நல்லது.
பாலா.கு, கல்லல், சிவகங்கை: திருப்பணி முழுமை பெறாமல் கும்பாபிஷேகம் நடத்தலாமா?
கூடாது. திருப்பணி முழுமை பெற்ற பிறகே நடத்த வேண்டும்.
கோபால்.கே, வைகுண்டதோப்பு, கன்னியாகுமரி: ஒருவரை பிடிக்காத போது சண்டையிடாமல் விலகலாமா...
வீணாக சண்டை எதற்கு? விலகுவது புத்திசாலித்தனம்.
நிர்மல்.கு, திருச்செந்துார், துாத்துக்குடி: அறிவுரை, உபதேசம் இரண்டும் ஒன்றா...
இல்லை. அனைவருக்கும் பொதுவானது அறிவுரை. ஆன்மிகத்திற்கு உரியது உபதேசம்.
அபிராமி.ம, திருநின்றவூர், திருவள்ளூர்: நோயாளியை பார்க்க நல்ல நேரம் பார்க்கணுமா?
தேவையில்லை. உடனடியாக அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
குமார்.எம், பழநி, திண்டுக்கல்: இறந்தவருக்கு ஐந்தாம் நாளில் காரியம் நடத்தலாமா?
கூடாது. சந்ததி நலமுடன் வாழ அவரவர் வழக்கப்படி செய்வது நல்லது.
