தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 07, 2026 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 09:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 8 சித்திரை 25: முகூர்த்த நாள். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

மே 9 சித்திரை 26: திருவோண விரதம். நடராஜர் அபிஷேகம். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள், ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.

மே 10 சித்திரை 27: திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமனுக்கு திருமஞ்சனம். வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.

மே 11 சித்திரை 28: சென்னை கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்றி உற்ஸவம். திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை.

மே 12 சித்திரை 29: வீரபாண்டி கவுமாரி அம்மன் பொங்கல். காரைக்குடி கொப்புடையம்மன் உற்ஸவம் ஆரம்பம். அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

மே 13 சித்திரை 30: ஏகாதசி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.

மே 14 சித்திரை 31: முகூர்த்த நாள். பிரதோஷம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர். தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us