தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 07, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 08:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயா.ஆர், குரோம்பேட்டை, செங்கல்பட்டு: *வேலை, பதவி உயர்வு பெற...

லட்சுமி நரசிம்மரை வழிபடுவதோடு, தகுதியை வளர்ப்பதும் அவசியம்.

பூரணி.எம், விக்கிரவாண்டி, விழுப்புரம்: *பூஜையறையில் சுவாமி படங்களை எந்த வரிசையில் வைக்க வேண்டும்?

விநாயகர், குலதெய்வம், இஷ்டதெய்வம் என்ற வரிசையில் வைக்கலாம்.

பார்வதி.கு, களக்காடு, துாத்துக்குடி: *ருத்ராட்ச மாலையில் எத்தனை ருத்ராட்சம் இருக்க வேண்டும்?

16, 32, 54, 108

குமார்.கே, பல்லடம், திருப்பூர்: *சுதர்சன ஹோமம் என்றால்...

மகாவிஷ்ணுவின் ஆயுதம் சுதர்சன சக்கரம். இதற்குரிய மந்திரம், ஸ்லோகங்களை ஜபம் செய்து நடத்துவது.

ராஜன்.கோ, செம்பட்டி, திண்டுக்கல்: *தேய்பிறையில் சுபநிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்?

வளர்பிறையில் முழு பலனும், தேய்பிறையில் பாதி பலனும் கிடைக்கும்.

ராமர்.வே, பப்பன்கிளேவ், டில்லி: *வெளியூர், வெளிநாடு செல்லும் முன்...

குலதெய்வம், இஷ்ட தெய்வத்தோடு துர்கையை வழிபடுங்கள்.

மருது.மா, குன்றக்குடி, காரைக்குடி: *வீட்டில் ஏற்றும் தீபம், கோயிலில் ஏற்றும் தீபம் எது சிறந்தது?

வீட்டுத் தீபத்தால் குடும்பத்திற்கும், கோயில் தீபத்தால் நாட்டிற்கும் நன்மை.

காசி.நா, நாகர்கோவில், கன்னியாகுமரி: *பைரவ பக்தர்கள் அஷ்டமி அன்று புதிய முயற்சியில் ஈடுபடலாமா?

கூடாது. புதிய முயற்சியில் நல்ல நாளில் ஈடுபடுங்கள்.

புனிதா.வெ, அருவங்காடு, நீலகிரி: *சுவாமிக்கு தினமும் நைவேத்யம் செய்யணுமா?

நீங்கள் தினமும் சாப்பிடுவது போல நைவேத்யம் செய்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us