ADDED : ஏப் 29, 2026 05:09 PM
10 பொருத்தம் பார்த்தல்
9 கோளும் சாதகமாக இருக்கிறதா என ஆராய்தல்
8 திசை உறவினரை அழைத்தல்
7 அடி எடுத்து வைத்து அக்னியை வலம் வருதல்
6 சுவை விருந்து அளித்தல்
5 பூதத்தை சாட்சியாக்குதல்
வேதத்தை ஓதுதல்
3 முடிச்சு இட்டு தாலி கட்டுதல்
இப்படி மணமகள், மணமகள் என இரண்டு மனங்கள் ஒன்றாக இணையும் சுபநிகழ்ச்சியே திருமணம். இதை நடத்துவதில் தடை ஏற்படுகிறதா... கவலை வேண்டாம். காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயிலுக்கு வாருங்கள். ஜாதகத்திலுள்ள களத்திர, பித்ரு, கிரக தோஷம் விலகும். குழந்தையின்மை, தம்பதிக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடு மறையும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி அன்று (காலை 8:00 - 12:00, மாலை 5:00-8:00 மணி) இங்கு 'குருவின் பலம் காட்டும் சுவடியை' தரிசித்தால் திருமணம் நடக்கும். இங்குள்ள அஷ்டலட்சுமி கோபுரத்தை சுற்றி வந்து வழிபட பணம் சேரும். -கே.குமார சிவாச்சாரியார், 95511 84326
