ADDED : ஏப் 29, 2026 04:54 PM

விஜய்.பி, ஆனைமலை. கோயம்புத்துார்: மணமக்களை வரவேற்க பால், பழம் கொடுப்பது ஏன்?
இதைக் கொடுத்து வரவேற்றால் சந்ததி உருவாகும்.
அஜய்.ஆர், பசவன்குடி. பெங்களூரு: பெரியவருக்கு சிறியவர்கள் ஆசி தரலாமா?
தரக் கூடாது. ஆனால் குருநாதர், துறவிகள் மட்டும் தரலாம்.
காவ்யா.மா. கருங்கல், சுன்னியாகுமரி: அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் இரண்டும் ஒன்றா...
இல்லை. அடி மேல் அடி வைத்து சன்னதியை சுற்றுவது அடிப்பிரதட்சணம், உருண்டு சுற்றுவது அங்கப்பிரதட்சணம்.
கணேஷ்.ரா, உளுந்துார்பேட்டை.: கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு கொடுமை செய்தால்...
எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தொடரும்.
ராம்.ஆர், எழுமலை, மதுரை: குற்றம் ஏன் அதிகமாகிறது?
பள்ளிப்பாடத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியம் தருவதில்லை. அத்துடன் மனதை கெடுக்கும் அலைபேசி, சமூக ஊடகத்தின் தாக்கமும் இதற்கு காரணம்.
முருகன்.எஸ். கன்னிவாடி, திண்டுக்கல்: மனம் சஞ்சலப்படுகிறதே... என்ன செய்ய...
மனதை புத்தியால் கட்டுப்படுத்துங்கள். சிந்தித்து செயல்பட்டால் சஞ்சலம் வராது.
லட்சுமி.எம். சுரண்டை, தென்காசி: அரச மரம், ஆல மரத்தின் சிறப்பு என்ன?
ஆலமரம் தட்சிணாமூர்த்தியின்(சிவன்) அம்சம், அரசமரம் -மகாவிஷ்ணுவின் அம்சம்.
வேல்முருகன்.தி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்: வேதத்தை எத்தனை ஆண்டு படிக்க வேண்டும்?
குருகுலத்தில் தங்கி ஏழாண்டு படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்க ஆயுள் போதாது.
ராஜா.க, சைதாப்பேட்டை, சென்னை: நாகதோஷம் எப்போது விலகும்?
திருமணம் செய்தால் விலகும்.
