தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 23, 2026 08:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 24 ஆடி 8: சங்கரன்கோவில் கோமதி அம்மன் பூப்பல்லக்கில் வீதியுலா. அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம். படவேடு ரேணுகாம்பாள், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி.

ஜூலை 25 ஆடி 9: ஏகாதசி விரதம். கோவர்த்தன விரதம். வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் சேஷ வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ெரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை கூடலழகர் பவனி, கலிய, கோட்புலி நாயனார் குருபூஜை.

ஜூலை 26 ஆடி 10: பிரதோஷம். வாசுதேவ துவாதசி. சங்கரன்கோவில் கோமதி அம்மன் தேர். திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். கரிநாள்.

ஜூலை 27 ஆடி 11: சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நேரம்: காலை 7:44 - 8:20 மணி வரை. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.

ஜூலை 28 ஆடி 12: பவித்திர சதுர்த்தசி. அழகர்கோவில் கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை. சுவாமிமலை முருகன் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசுக்காட்சி.

ஜூலை 29 ஆடி 13: பவுர்ணமி. சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். வியாச பூஜை. கோபத்ம விரத சமாப்தம். அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் தேர். அகோபிலமடம் 14வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். பட்டினத்தடிகள் குருபூஜை. ஆளவந்தார் திருநட்சத்திரம்.

ஜூலை 30 ஆடி 14: திருவோண விரதம். சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us