தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 23, 2026 08:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிந்து.எஸ், திருநள்ளாறு, புதுச்சேரி: ஐந்து இலை கொண்ட வில்வமரம் வீட்டில் தானாக வளர்வது நல்லதா...

சிவபெருமானின் அருள் உங்களுக்கு இருக்கிறது.

வேணி.டி, திருத்தணி, திருவள்ளூர்: பூஜையறை எந்த நிறத்தில் இருப்பது நல்லது?

மஞ்சள் அல்லது சந்தனம்.

கோமதி.எஸ், கடையநல்லுார், தென்காசி: கோயில்களில் கற்பூரம் ஏற்றுவதில்லையே... ஏன்?

கற்பூரத்தை ஏற்றினால் கருவறை, சிற்பம், சிலைகள் பழுதாகும்.

நர்மதா.வி, மருதமலை, கோயம்புத்துார்: மணப்பெண்ணுக்கு சீர்வரிசையில் சாளக்கிராம கல் தரலாமா...



அன்றாட பூஜைக்காக சாளக்கிராம கல் கொடுப்பது சில குடும்பத்தின் வழக்கம்.

காவேரி.எம், தரமணி, சென்னை: வளைகாப்பு நடத்துவது ஏன்?

தாயும், குழந்தையும் நலமாக இருக்க குலதெய்வத்தை வழிபடும் நிகழ்ச்சி இது.

ஜானகி.ஏ, திருமங்கலம், மதுரை: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் கணிக்கலாம்?

ஒரு வயது ஆகட்டுமே.

ஐஸ்வர்யா.ஆர், ஐஐடிபார்க், டில்லி: வீட்டிற்குள் வவ்வால் வரலாமா...

வரக் கூடாது. அது பறப்பதை நாம் தடுக்க முடியாது.

ஏ.குமார், கோவில்பட்டி, துாத்துக்குடி: அடிக்கடி என்னை நாய் துரத்துகிறது. தோஷமா?

இல்லை. நாய் மீது அன்பாக இருங்கள்.



சரஸ்வதி.கே, வேடசந்துார், திண்டுக்கல்: இறந்த என் அண்ணனுக்கு ஈமக்கிரியை செய்யவில்லை. திதி எப்போது கொடுக்கலாம்?

புரட்டாசி மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசையில் ராமேஸ்வரத்தில் கொடுக்கவும். பின்னர் ஆண்டு தோறும் வீட்டில் நடத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us