தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 27, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 08:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக.28 ஆவணி 11: காயத்ரி ஜபம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு. திருத்தணி முருகன் கிளி வாகனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லித்தாயார் பவனி.

ஆக.29 ஆவணி 12: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.

ஆக.30 ஆவணி 13: முகூர்த்த நாள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

ஆக.31 ஆவணி 14: முகூர்த்த நாள். மகா சங்கடஹர சதுர்த்தி. திருச்செந்துார், பெருவயல் முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

செப்.1 ஆவணி 15: சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல். திருச்செந்துார் முருகன் கேடயச்சப்பரம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

செப்.2 ஆவணி 16: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். திருப்போரூர் முருகன் பால் அபிஷேகம்.

செப்.3 ஆவணி 17: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். ரத்தினகிரி முருகன் தங்கத்தேர். பழநி, சுவாமிமலை, வயலுார் முருகன் புறப்பாடு. திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us