தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 27, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 லதா.கு, மயூர்விகார், டில்லி: ஆவணி மாதத்தில் தொழில் தொடங்கலாமா?

தொடங்கலாம். விநாயகர் சதுர்த்தி மாதமான ஆவணியில் தொடங்குங்கள்.



ஸ்ரீதேவி.டி.எஸ், மதுரை: விசேஷ நாளில் கீரை சாப்பிடலாமா...

சாப்பிடலாம். பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பை கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.



அம்பிகா.எம், எட்டையபுரம், துாத்துக்குடி: பெற்றோருக்கான அறிவுரை...

முதல் ஆசிரியரான நீங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவர்கள் வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.

பவதாரணி.மா, பல்லடம், திருப்பூர்: பிரணவம் (ஓம்) என்பதற்கு...

என்றும் 'புதிய தெய்வீக சக்தி' எனப்பொருள்.

மந்திரத்துடன் 'ஓம்' சேர்த்து சொன்னால் மட்டுமே இதற்கு பலன். (ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய)

சரவணன்.பி, அன்னுார், கோயம்புத்துார்: அம்மனை வழிபட்டால்...

குழந்தைகள் மீது அன்பு காட்டுபவள் தாய் (அம்மன்) இவளை வழிபட எதற்கும் தீர்வு கிடைக்கும்.

பாரதி.ஏ, கொட்டாரம், கன்னியாகுமரி: வீதி உலாவில் சுவாமிக்கு செய்ய வேண்டிய மரியாதை என்ன?

மங்களவாத்தியம், யானை, குதிரை, ஒட்டக பவனி, குடை, தீவட்டி,வேதகோஷம், திருமுறை பாடுதல்.

நரசிம்மன்.எல், பழநி, திண்டுக்கல்: வீட்டில் சித்தர் படம் இருந்தால் அணையாவிளக்கு கட்டாயமா...

இல்லை. காலை (6:00 - 8:00), மாலை (5:30 - 7:30)விளக்கு ஏற்றினால் போதும்.

கிஷோர்.எஸ், வண்டலுார், செங்கல்பட்டு: ஆன்மிக சுற்றுலா செல்ல ஆசை. முதுமையால் முடியவில்லையே...

வருந்த வேண்டாம். பக்தி, மனத்துாய்மை, ஒழுக்கத்தை கடவுள் விரும்புகிறார்.

ராம்சரண்.சி, திருநள்ளாறு, புதுச்சேரி: என் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, ஆதரவற்ற ஒருவருக்கு இறப்புச் சடங்கு செய்தேன். இது சரியா...

கவலை வேண்டாம். நீங்கள் செய்தது புண்ணியச்செயல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us