தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 18, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.18 புரட்டாசி 1: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் சேஷ வாகனம். நாட்டரசன்கோட்டை, குணசீலம் பெருமாள் புறப்பாடு. திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

செப்.19 புரட்டாசி 2: துார்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. லட்சுமி விரதம் ஆரம்பம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள் சேஷ வாகனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனம்.

செப்.20 புரட்டாசி 3: நந்த நவமி. கேதார விரதம் ஆரம்பம். ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள் பல்லக்கில் பவனி. திருப்பதி பெருமாள் ஹனுமன் வாகனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.

செப்.21 புரட்டாசி 4: கஜலட்சுமி விரதம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். ஏனாதி நாயனார் குருபூஜை.

செப்.22 புரட்டாசி 5: ஏகாதசி, திருவோண விரதம். திருப்பதி பெருமாள் தேர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். மதுரை கூடலழகர், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. வேதாந்த தேசிகர், திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம்.

செப்.23 புரட்டாசி 6: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் சீனிவாசர், நாட்டரசன்கோட்டை, குணசீலம் கோயில்களில் தேர்.

செப்.24 புரட்டாசி 7: பிரதோஷம். சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நரசிங்கமுனையரையர் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us