ADDED : செப் 24, 2026 11:17 AM

ராதிகா.ஆர், கோடம்பாக்கம், சென்னை: நம் மனமே கோயில் என்கிறார்களே...
உண்மைதான். அன்பும், நல்ல எண்ணமும் இருந்தால் அதுவே கோயில்.
புனிதா.எம், சிதம்பரம், கடலுார்: குலதெய்வக் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல முடியவில்லை. என்ன செய்யலாம்?
கும்பாபிஷேக நாளில் இருந்து 48 நாட்களுக்குள் செல்லுங்கள்.
ராமராஜ்.கே, தச்சநல்லுார், திருநெல்வேலி: விநாயகருக்கு எந்த நிறத்தில் வஸ்திரம் சாத்தலாம்?
சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற வஸ்திரத்தை சாத்துங்கள்.
அருள்.கோ, மயிலாடி, கன்னியாகுமரி: பகவத் கீதை சொல்லும் கர்ம யோகம் என்றால்...
கடமையைச் செய்; அதற்கான பலனை பகவான் தருவார்.
மீனாட்சி.கு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: சேவையில் ஈடுபட குழந்தைகளை எப்படி உற்சாகப்படுத்தலாம்?
நாடும், மதமும் நம் கண்கள். இதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உற்சாகமுடன் ஈடுபடுவர்.
ரவி.எம், பேரூர், கோயம்புத்துார்: எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் சேரலாமா?
கிடைத்த வேலையில் அக்கறையுடன் ஈடுபடுபவர் புத்திசாலி.
குமரன்.பா, தொட்டிப்பாளையம், திருப்பூர்: ஆண்களுக்கு கற்பு உண்டா...
நிச்சயம் உண்டு. மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாயாக கருதுங்கள்.
சுபத்திரா.மோ, டில்லி: பிறந்த நாளை கொண்டாடுவது தேதியிலா, நட்சத்திரத்திலா?
நீங்கள் பிறந்த தமிழ் மாதம், நட்சத்திர நாளில் கொண்டாடுங்கள்.
கவிதா.எஸ், குன்றக்குடி, சிவகங்கை: மாலையில் ஏற்றிய தீபத்தை அரை மணி நேரத்தில் அணைக்கலாமா?
வேண்டாம். இரண்டு மணி நேரம் (மாலை 5:30 - 7:30 மணி) விளக்கு எரியட்டும்.
