ADDED : செப் 24, 2026 11:48 AM

செப்.25 புரட்டாசி 8: கதளீ கவுரி விரதம். அனந்த விரதம். நடராஜர் அபிேஷக நாள். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தெப்போற்ஸவம். அஹோபில மடம் 17வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.
செப்.26 புரட்டாசி 9: பவுர்ணமி. உமாமஹேஸ்வர விரதம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம். அவிநாசி சிவனுக்கு பவுர்ணமி பூஜை. 63 நாயன்மார்களுடன் குருபூஜை செய்தருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனம்.
செப்.27 புரட்டாசி 10: மகாளய பட்சம் ஆரம்பம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள் எழுந்தருளல். திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
செப்.28 புரட்டாசி 11: தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிேஷகம். ருத்திரபசுபதி நாயனார் குருபூஜை.
செப்.29 புரட்டாசி 12: சங்கடஹர சதுர்த்தி. மஹாபரணி. பிரஹதீ கவுரி விரதம். சுவாமிமலை முருகனுக்கு தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.
செப்.30 புரட்டாசி 13: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதம். திருச்செந்துார், பழநி முருகன் புறப்பாடு.
அக்.1 புரட்டாசி 14: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருநாளைப்போவார் நாயனார் குருபூஜை.
