sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 05, 2024 12:25 PM

Google News

ADDED : செப் 05, 2024 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.சங்கரி, மயூர்விஹார், டில்லி.

*விநாயகரை எந்த நாளில் வழிபடலாம்?

சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபட சங்கடம் தீரும். மேலும் செவ்வாய், வெள்ளி ஏற்றவை.

வி.தருண், திருத்தணி, திருவள்ளூர்.

*சித்தி, புத்தி என்பவர் யார்?

வெற்றி, புத்தியை தருபவர் விநாயகர். இதை உணர்த்தும் விதத்தில் சித்தி, புத்தியுடன்(மனைவிகள்) இருக்கிறார்.

எஸ்.வினோதா, ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி.

*விநாயகரின் நட்சத்திரம், ராசி எது?

அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி

கே.சிந்துஜா, கனகபுரா, பெங்களூரு.

*எலியின் மீது விநாயகர் இருப்பது ஏன்?

கஜமுக அசுரனை தந்தத்தால் குத்த எலி வடிவில் சரணடைந்தான். அவனை வாகனமாக ஏற்றார் விநாயகர்.

ஆர்.வைதேகி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.

*அர்ச்சனை செய்ய அருகம்புல்லிற்கு இணையான பூக்கள் எவை?

வெள்ளெருக்கு, தும்பை, வில்வம்

பி.ஹேமந்த், சிவகாசி, விருதுநகர்.

*கனவில் வீட்டுக்கு யானை வந்தால்...

உங்கள் வழிபாட்டை விநாயகர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.

ஆர்.கணபதி, பல்லடம், திருப்பூர்.

*விநாயகர் சதுர்த்தியை தேசிய அளவில் கொண்டாடியவர் யார்?

தேச ஒற்றுமைக்காக விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் கொண்டாடினார்.

எம்.அர்ச்சனா, நிலக்கோட்டை, திண்டுக்கல்.

*யானைச் சாணம் திருஷ்டியை போக்குமா…

யானையின் சாணம் செய்வினை கோளாறையும், அதன் காலடி பட்ட மண் திருஷ்டியையும் போக்கும்.

எல்.கணேஷ், கருவடிபாளையம், புதுச்சேரி.

*பிள்ளையார்சுழி இடுவது ஏன்?

ஓம் என்னும் மந்திரமே விநாயகர். அதனால் பிள்ளையார்சுழி இடுகிறோம்.

ஜி.மயூரா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

*விநாயகருக்குப் பிடித்த ராகம், தாளம் எது?

ராகம் - ஹம்ஸத்வனி, கம்பீரநாட்டை

தாளம் - ஆதி, சச்சபுடம்






      Dinamalar
      Follow us