sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கோமாதா... எங்கள் குலமாதா

/

கோமாதா... எங்கள் குலமாதா

கோமாதா... எங்கள் குலமாதா

கோமாதா... எங்கள் குலமாதா


ADDED : ஆக 30, 2024 10:50 AM

Google News

ADDED : ஆக 30, 2024 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் காமதேனுவே போற்றி

ஓம் திருமகள் வடிவே போற்றி

ஓம் தேவருலகப் பசுவே போற்றி

ஓம் பால் சுரப்பவளே போற்றி

ஓம் பயம் போக்குபவளே போற்றி

ஓம் அமிர்தவாணியே போற்றி

ஓம் உயிர்காப்பவளே போற்றி

ஓம் உத்தமியே போற்றி

ஓம் காளையன் மனைவியே போற்றி

ஓம் மாய உருவினளே போற்றி

ஓம் மகா சக்தி வடிவினளே போற்றி

ஓம் அழகின் பிறப்பிடமே போற்றி

ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய் போற்றி

ஓம் முக்கண்ணியே போற்றி

ஓம் பாலுாட்டும் தாய் உருவே போற்றி

ஓம் பாவங்கள் போக்குவாய் போற்றி

ஓம் சாபங்கள் விரட்டுவாய் போற்றி

ஓம் ஐம்பொருள் ஈவாய் போற்றி

ஓம் அறத்தின் வடிவமே போற்றி

ஓம் ஆக்கும் சக்தியே போற்றி

ஓம் அபயம் அளிப்பவளே போற்றி

ஓம் இறைவர் வாகனமே போற்றி

ஓம் ஏற்றம் தருவாய் போற்றி

ஓம் கார்த்தனை பணிய வைத்தாய் போற்றி

ஓம் தொழுவத்தில் இருப்பாய் போற்றி

ஓம் யோக முகத்தாய் போற்றி

ஓம் கன்று ஈயும் கருணையே போற்றி

ஓம் அன்பானவளே போற்றி

ஓம் அடக்கத்தின் இலக்கணமே போற்றி

ஓம் இடர்களைக் களைவாய் போற்றி

ஓம் இனிமை தருவாய் போற்றி

ஓம் அம்மா பாசபிரதிபலிப்பே போற்றி

ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி

ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி

ஓம் வளம் பெருக்குபவளே போற்றி

ஓம் ஈன்றதாய் ஒப்பாய் போற்றி

ஓம் இரக்க குணத்தவனே போற்றி

ஓம் சோலையில் உலவுவாய் போற்றி

ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய் போற்றி

ஓம் சுதந்திர நாயகியே போற்றி

ஓம் ஆபரணம் தரித்தாய் போற்றி

ஓம் புல்விரும்பும் புலனமாது போற்றி

ஓம் தருமத்தின் உருவமே போற்றி

ஓம் எதிர்சக்தி விரட்டுவாய் போற்றி

ஓம் இல்லம் காக்கும் நல்லவளே போற்றி

ஓம் வரம் தரும் வள்ளலே போற்றி

ஓம் கோவென்று பெயர் கொண்டாய் போற்றி

ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கே போற்றி

ஓம் எளியோரைக் காத்தருள்வாய் போற்றி

ஓம் அகந்தையை அழிப்பாய் போற்றி

ஓம் அல்லலுக்கு விடை தருவாய் போற்றி

ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியே போற்றி

ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளே போற்றி

ஓம் தியாகத்தின் வடிவினளே போற்றி

ஓம் அன்புக்கு இலக்கணமே போற்றி

ஓம் வேதத்தை காலாய் கொண்டாய் போற்றி

ஓம் கொம்புடைய குணவதி போற்றி

ஓம் மடியுடை மாதரசியே போற்றி

ஓம் ஆற்றல் உடைய அன்னையே போற்றி

ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய் போற்றி

ஓம் வீரசக்தி வடிவினாய் போற்றி

ஓம் விந்தியத்தில் இருந்து வந்தாய் போற்றி

ஓம் லோகப் பசுவடிவே போற்றி

ஓம் பார்வதி வடிவினளே போற்றி

ஓம் அழகான அம்மாவே போற்றி

ஓம் பதினான்கு உலகும் செல்வாய் போற்றி

ஓம் பரமனுக்கு பால் சொரிந்தாய் போற்றி

ஓம் பால்முகத் தேவியே போற்றி

ஓம் மூவர் போற்றும் முத்தே போற்றி

ஓம் முனிவர் வாக்கில் இருப்பாய் போற்றி

ஓம் முன்னேற்றத்தை முன் சொல்வாய் போற்றி

ஓம் தீயவை களைவாய் போற்றி

ஓம் சுத்தப் பொருள் தருபவளே போற்றி

ஓம் ஆதார சக்தியே போற்றி

ஓம் ஆனந்தப் பசு முகமே போற்றி

ஓம் உண்மையான உயிர் சக்தியே போற்றி

ஓம் நேரில் உதிக்கும் தெய்வ உருவே போற்றி

ஓம் தோஷங்கள் போக்கும் துரந்தரீ போற்றி

ஓம் கார வடிவினாய் போற்றி

ஓம் கலைகளின் இருப்பிடமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

ஓம் தயை உடைய தாயே போற்றி

ஓம் நான்மறை போற்றும் நல்மகளே போற்றி

ஓம் துதிக்கப்படுபவளே போற்றி

ஓம் நித்தமும் நினைக்கப் படுவாய் போற்றி

ஓம் தினமும் பூசனை ஏற்பாய் போற்றி

ஓம் பூரண உருவமே போற்றி

ஓம் சிவன் தலங்கள் ஆக்கினாய் போற்றி

ஓம் மந்திரப் பொருள் உடையவளே போற்றி

ஓம் முக்காலமும் உணர்ந்தவளே போற்றி

ஓம் முக்திக்கு வழி காட்டுவாய் போற்றி

ஓம் வேற்றுமை களைந்திடுவாய் போற்றி

ஓம் எல்லா நோய்களும் விரட்டுவாய் போற்றி

ஓம் செல்வங்கள் அருளிடும் மாதே போற்றி

ஓம் மங்களங்களின் பிறப்பிடமே போற்றி

ஓம் புண்ணியத்தின் ஊற்றே போற்றி

ஓம் புகழான புவன மாதே போற்றி

ஓம் புத்தொளி தரும் தாயே போற்றி

ஓம் நான்முகன் அவதாரமே போற்றி

ஓம் சிவபக்திப் பிரியவளே போற்றி

ஓம் வினைகளை வேரறுப்பாய் போற்றி

ஓம் கொம்புடைய தாயே போற்றி

ஓம் ஆலயக் கோமுகமே போற்றி

ஓம் அறங்காத்தோர்க்கு அரமே போற்றி

ஓம் விடந்தீர் விந்தையளே போற்றி

ஓம் வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி

ஓம் கிரகலட்சுமி வடிவினாளே போற்றி

ஓம் கோமாதா தாயே போற்றி! போற்றி!!






      Dinamalar
      Follow us