
எம்.மைதிலி, ராமமூர்த்திநகர், பெங்களுரு: குலதெய்வத்தை மறந்தால்...
பரிகாரம் கிடையாது. உடனே குலதெய்வக் கோயிலுக்கு செல்லுங்கள். ஆண்டுக்கு இருமுறை செல்வது கட்டாயம்.
பி.ரமா, ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல்: சுவாமி படத்தில் இருந்து விழுந்த மாலையை மீண்டும் சாத்தலாமா?
சாத்தலாம். பயம் வேண்டாம்.
எஸ்.முத்து, கருங்கல், கன்னியாகுமரி: பெருமாள் கோயில் தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கலாமா?
புனிதமான கோயில் தீர்த்தத்தை தெளிக்கலாம்.
ஆர்.பரணிதரன், கீழப்பாவூர், தென்காசி: கடனாக கொடுத்த பணம் கிடைக்க...
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள்.
ஆர்.அகிலா, போத்தனுார், நீலகிரி. கவலையான என் மனதிற்கு பரிகாரம் உண்டா...
திங்கள் தோறும் அல்லது பவுர்ணமியன்று அம்மனுக்கு வெண்ணிற மலர்களைச் சாத்தி விளக்கேற்றுங்கள்.
ஆர். அபர்ணா, மதுராந்தகம், செங்கல்பட்டு: பிறந்த நட்சத்திரத்தன்று வளைகாப்பு நடத்தலாமா?
கூடாது. உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற நாளில் நடத்துங்கள்.
கே.பவித்ரன், சோழவந்தான், மதுரை: வீட்டு வாசலில் உள்ள காகத்தின் கூட்டை கலைத்தால்...
முட்டை இட்டு குஞ்சுகள் வளர்ந்ததும் பறந்து விடும். அதுவரை பொறுமையாக இருந்தால் புண்ணியம்.
அ.மணி, பப்பன்கிளேவ், டில்லி: தெய்வானையை பற்றிச் சொல்லுங்கள்.
சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு நன்றிக்கடனாக இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து வைத்தனர் தேவர்கள்.
பா.ஜெயஸ்ரீ, நெய்வேலி, கடலுார்: திவசம், தர்ப்பணம் செய்ய ஏற்ற இடம் எது?
திவசத்தை வீட்டிலும், தர்ப்பணத்தை ஆற்றங்கரையில் செய்யலாம்.