
பெரியபுராணத்தில் உள்ள சிவநாமங்களை தொகுத்துள்ளோம். கார்த்திகை சோமவாரத்தன்று பாடினால் பயம் தீரும். மனதில் தெளிவு பிறக்கும்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவா போற்றிநிலவுலாவிய நீர்மலி வேணியா போற்றி
அலகில் சோதியா போற்றி
அம்பலத்தாடுவாய் போற்றி
மலர்ச் சிலம்படியோன் போற்றி
மதிவளர் சடைமுடி மன்றுளாய் போற்றி
காதில் வெண் குழையோன் போற்றி
நெற்றியில் கண்ணா போற்றி
நீரணி மேனியா போற்றி
கையில் மான் மழுவா போற்றி
கங்கை சூழ் சடையா போற்றி
கதிர்இளம் பிறை நறுங்கண்ணி ஐயனே போற்றி
மதிபொதி செஞ்சடை சென்னியா போற்றி
விடை மருவும் பெருமான் போற்றி
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல்
வைத்த அங்கணா போற்றி
மாதொரு பாகா போற்றி
பிஞ்ஞகா போற்றி
நெற்றி விழியா போற்றி
கங்கை சடைக்கரந்த பிரானே போற்றி
மின்னார் செஞ்சடை அண்ணலே போற்றி
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தாய் போற்றி
அரவின் ஆரம் புனைந்தாய் போற்றி
பந்தம் வீடுதரும் பிரானே போற்றி
மை விரவுகண்டா போற்றி
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையோன் போற்றி
பொன்னின் புரிபுன் சடையா போற்றி
மேலவர் புரங்கள் செற்ற விடையா போற்றி
தொல்லை மால்வரைபயந்த துாயாள்தன் திருப்பாகா போற்றி
முன்னம் மால் அயனறியா முதல்வா போற்றி
உம்பர் நாயகா போற்றி
அற்புதத் தனிக் கூத்தாடும் நாதா போற்றி
புனற் சடைமுடியார் போற்றி
திங்கள் கண்ணி மன்றுளாய் போற்றி
மின்னொளிர் சடையா போற்றி
பிறைவளர் சடைமுடிப்பிரானே போற்றி
வம்புலா மலர்ச்சடை வள்ளலே போற்றி
மலைமகள் கேள்வா போற்றி
கறை மறை மிடற்றினாய் போற்றி
இழையணி முந்நுால் மார்பின் எந்தையே போற்றி
கழுத்து நஞ்சொளித்து நின்றவா போற்றி
வெங்கண் விடையா போற்றி
கறைகமழுஞ் சடைமுடியும் நாற்றோளும் முக்கண்ணும்
கறை மருவும் திருமிடறும் கரந்தருளி எழுந்தருளும் மறையவா போற்றி
சின விடைப்பாகா போற்றி
வேத முதல்வா போற்றி
விடையின்மேல் வருவாய் போற்றி
செக்கர் வெண்பிறை சடையா போற்றி
ஆறு சூடிய ஐயரனே போற்றி
ஆயநுண்பொருள் ஆகியும்வெளியே அம்பலத்தில் ஆடுவாய் போற்றி
கொன்றைவார் சடையா போற்றி
இருவரால் அறிய ஒண்ணா ஒருவா போற்றி