
சொ.சிவா, மணிமுத்தாறு, திருநெல்வேலி: பெண்களுக்கு விரதம் அவசியமா...
மாதம் ஒருமுறை (பவுர்ணமி) விரதம் இருப்பதில் தவறில்லை.
ரா.அம்பிகா, பழநி, திண்டுக்கல்: பாலியல் கொடுமை பற்றி என் மகளுக்கு சொல்லலாமா...
தாராளமாக சொல்லுங்கள். உங்கள் வழிகாட்டுதல் அவளுக்கு அவசியம்.
கு.கல்யாண், திருநாவலுார், விழுப்புரம்: மனப்பொருத்தம் இருந்தாலும், ஜாதகப் பொருத்தம் அவசியமா...
மனப்பொருத்தம் இருந்தால் எதுவும் தேவை இல்லை.
டி.ஸ்ரேயா, குருந்தன்கோடு, கன்னியாகுமரி: முன்னோர் விட்டுச் சென்ற தர்ம காரியத்தை தொடரலாமா?
தொடரலாம். முன்னோர் காட்டிய வழியை அப்படியே தொடருங்கள்.
வா.மணி, காரைக்குடி, சிவகங்கை: கோயிலில் பூஜை நின்று விட்டால்...
பூஜையை உடனே தொடங்குங்கள். அத்துடன் பரிகார பூஜை செய்யுங்கள்.
பூஜா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: தலவிருட்சத்திற்கு நான் தண்ணீர் ஊற்றலாமா?
சுவாமிக்கு சமமான இதனை வலம் வந்தால் போதும்.
பா.ஸ்ரீநிதி, கோடம்பாக்கம், சென்னை: *பிறந்த நாளை எப்போது கொண்டாடலாம்?
பிறந்த தமிழ் மாதம், நட்சத்திரத்தில் கொண்டாடுங்கள்.
தி.செல்வி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: விநாயகருக்கு சாத்திய அருகம்புல் காய்ந்த பின்னர் அதை சாம்பிராணி துாபத்தில் சேர்க்கலாமா?
நிர்மால்யம்' என்னும் இதை சேர்க்க கூடாது.
வெ.ராஜாராம், நொய்டா, டில்லி: எந்த கிழமையில் சொத்து வாங்கலாம்?
வெள்ளிக்கிழமை