தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 05, 2025 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 09:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யு.ஆர்த்தி, ஏரோசிட்டி, டில்லி: அமைதியுடன் வாழ...

முன்னோர் சொல்லியபடி ஒழுக்கம், மனக்கட்டுப்பாடுடன் வாழுங்கள்.

டி.காவ்யா, இருக்கன்குடி, விருதுநகர்: 48 நாள் விரதம் இருந்தால் விருப்பம் நிறைவேறுமா...

தகுதிக்கு ஏற்றதாக உங்கள் விருப்பம் இருக்க வேண்டும். நிறைவேறுமா என்ற சந்தேகம் வேண்டாம்.

ஆர்.ஆனந்த், எட்டையபுரம், துாத்துக்குடி: தீய செயலில் ஈடுபட்ட எனக்கு நிம்மதி கிடைக்குமா...

மனம் திருந்தி கடவுளை சரணடைந்தால் நிம்மதி கிடைக்கும்.

கா.ராஜேஸ்வரி, பசவன்குடி, பெங்களூரு: கர்மவினை தீர...

கோயில் வழிபாடு அவசியம். இதையே 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றார் அவ்வையார்.

ரா.பூரணி, ஆவடி, திருவள்ளுர்: ஜாதகத்தில் தோஷம் இருந்தால்...

ஜாதக ரீதியான தோஷத்திற்கு பரிகாரம் அவசியம். உ.ம்: திருமணத் தடை விலக வியாழன் அன்று குருபகவானை வழிபடலாம்.

பே.புஷ்பராணி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: *நவக்கிரகத்தை வெவ்வேறு திசையில் பிரதிஷ்டை செய்வது ஏன்?

வானில் உள்ள கிரகங்கள் வெவ்வேறு திசையில் சஞ்சரிப்பதை தவ சக்தியால் ஞானிகள் கண்டறிந்தனர். அதனடிப்படையில் இப்படி செய்கிறோம்.

மு.அமராவதி, அவிநாசி, கோயம்புத்துார்: விநாயகர் பிரம்மச்சாரியா... குடும்பஸ்தரா...

பிரம்மச்சாரி, குடும்பஸ்தர் என இரண்டு கோலங்களிலும் விநாயகரை வழிபடலாம்.

வி.மாரி, நத்தம், திண்டுக்கல்: ருத்ராட்சம், ஸ்படிக மாலையை யார் அணியலாம்?

ஒழுக்கம், பக்தி கொண்டவர்கள் அணியலாம்.

கு.துவாரகேஷ், திங்கள்சந்தை, கன்னியாகுமரி: இயற்கை சீற்றத்தை தடுக்க ஆன்மிக ரீதியாக வழி உண்டா?

மனிதனுக்கு இயற்கை தரும் தண்டனை இது. தர்மவழியில் வாழ்ந்தால் இதை தடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us