சி.இனியா, நங்கநல்லுார், சென்னை: *திருமணம் நடக்க... ?
திருமணம் நடக்க வேண்டும் என்றால் திருச்செந்துார் முருகனை தரிசியுங்கள்.
ப.தான்யா, காரைக்கால், புதுச்சேரி: *மனைவி வழிபாடு செய்தால் கணவருக்கு பலன் உண்டா?
உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் தனக்காக வழிபடுவது அவசியம்.
சு.திவ்யா, பீளமேடு, கோயம்புத்துார்: பிளாஸ்டிக் மாவிலையை கட்டலாமா...?
கூடாது. சுற்றுச்சூழல் பாதிக்க நாமே இடம் தரலாமா...
ரா.காவ்யா, கொட்டாம்பட்டி, மதுரை: *சிவராத்திரி அன்று குலதெய்வம் கோயிலுக்குத் தான் போகணுமா...?
இல்லை. சிவராத்திரி அன்று சிவன் கோயிலுக்கு செல்லுங்கள்.
அ.அபிநயா, கம்பம், தேனி: *பெருமாள் கோயிலில் கருட சேவையை தரிசித்தால்...?
வேண்டுதல் பலிக்கும். கவலை தீரும். மோட்சம் கிடைக்கும்.
கு.நித்யா, விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி: *கிரக தோஷம் விலக...?
திருஞான சம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தை தினமும் பாடுங்கள்.
சி.சுகன்யா, பூதப்பாண்டி, கன்னியாகுமரி: *ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோயிலுக்கு செல்லலாமா...?
செல்லலாம். ஆனால் வழிபாட்டில் பொறுமை அவசியம்.
கா.சவுந்தர்யா, மல்லேஸ்வரம், பெங்களூரு: *பிள்ளையார் சுழி இட்டு எழுதுவது ஏன்?
முதற்கடவுளான விநாயகரை வழிபட்டு செயலைத் தொடங்குவது அவசியம்.
கோ.அனன்யா, கல்யாண்புரி, புதுடில்லி: *பிறந்த நாள் (நட்சத்திரம் அன்று) என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
பெற்றோரை வணங்கிய பின், குல, இஷ்ட தெய்வ கோயில்களில் அர்ச்சனை செய்யுங்கள்.