
ஜூலை 25 ஆடி 9: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் வெள்ளி ரிஷப சேவை. திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை. படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. 
ஜூலை 26 ஆடி 10: சந்திர தரிசனம். நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் சிவபூஜை. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மடி மீது ெரங்கமன்னார் சயன திருக்கோலக்காட்சி. கரிநாள்.
ஜூலை 27 ஆடி 11: சுவர்ண கவுரி விரதம். மதுரை மீனாட்சி அம்மன் முளைக்கொட்டு உற்ஸவம் ஆரம்பம். இன்று காலை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம்: 7:44 - 8:20 மணி வரை.
ஜூலை 28 ஆடி 12: நாகசதுர்த்தி. துார்வா கணபதி விரதம். ஆடிப்பூரம். சதுர்த்தி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் தேரில் பவனி. மதுரை அழகர்கோவில் நுாபுர கங்கையில் ராக்காயி அம்மனுக்கு வளையல் அலங்காரம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. ஆண்டாள் திருநட்சத்திரம். 
ஜூலை 29 ஆடி 13: கருட பஞ்சமி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம். 
ஜூலை 30 ஆடி 14: சஷ்டி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனம். மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி யானை வாகனம். 
ஜூலை 31 ஆடி 15: நயினார்கோவில் சவுந்திரநாயகி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் ஊஞ்சல் சேவை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம். பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை. 

