தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நலம் தருவாய் நாகராஜா...

நலம் தருவாய் நாகராஜா...

நலம் தருவாய் நாகராஜா...


ADDED : ஜூலை 25, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 08:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓம் நல்லரவமே போற்றி

ஓம் நாக தேவனே போற்றி

ஓம் அரசடி அருள்பவரே போற்றி

ஓம் அபயம் அளிப்பவரே போற்றி

ஓம் அன்பர்க்கு எளியரே போற்றி

ஓம் அடங்காரின் அழிவே போற்றி

ஓம் அரனாரின் அணியே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி

ஓம் அனந்தனே போற்றி

ஓம் ஆதிசஷேனே போற்றி

ஓம் ஆடியருள்பவரே போற்றி

ஓம் ஆனைமுகன் அருகில் இருப்பவரே போற்றி

ஓம் ஆலமுடையவரே போற்றி

ஓம் ஆயுதமானவரே போற்றி

ஓம் இசைப்பிரியரே போற்றி

ஓம் இறையருள் கூட்டுவிப்போரே போற்றி

ஓம் ஈறிலாறே போற்றி

ஓம் ஈர்க்கும் வடிவினரே போற்றி

ஓம் உணர்ந்து வருபவரே போற்றி

ஓம் ஊர்தோறும் அருள்பவரே போற்றி

ஓம் எங்கும் இருப்பவரே போற்றி

ஓம் எளிதில் மகிழ்பவரே போற்றி

ஓம் எண்ணிலாத் தலையரே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்போரே போற்றி

ஓம் ஒப்பிலாதவரே போற்றி

ஓம் ஒன்றுவிப்பவரே போற்றி

ஓம் கம்பளரே போற்றி

ஓம் கத்ரு பத்ரரே போற்றி

ஓம் கம்பீரரே போற்றி

ஓம் கருடனை பணிந்தவரே போற்றி

ஓம் காண இனியவரே போற்றி

ஓம் கயவரை அழிப்பவரே போற்றி

ஓம் காளிங்கரே போற்றி

ஓம் கண்ணனுக்கு அடங்கியவரே போற்றி

ஓம் கார்க்கோடகரே போற்றி

ஓம் காவலனுக்கு ஆயுதரே போற்றி

ஓம் கிரீடமானவரே போற்றி

ஓம் கிரக தோஷ நாசகரே போற்றி

ஓம் குங்குமப் பிரியரே போற்றி

ஓம் குலக்காவலரே போற்றி

ஓம் கேது சிரமானவரே போற்றி

ஓம் கோள்வினை பொடிப்பவரே போற்றி

ஓம் சங்கரரே போற்றி

ஓம் சப்த நாயகரே போற்றி

ஓம் சக்தி வடிவினரே போற்றி

ஓம் சங்கரனை அணைபவரே போற்றி

ஓம் சட்டை உரிப்பவரே போற்றி

ஓம் சத்தியத்துக்கு அடங்கியவரே போற்றி

ஓம் சிவதாசரே போற்றி

ஓம் சிவனருள் பெற்றவரே போற்றி

ஓம் சுகுமார தாசரே போற்றி

ஓம் சுப்ரமணிய ஷேத்ரரே போற்றி

ஓம் சீறுபவரே போற்றி

ஓம் சீதள உடலரே போற்றி

ஓம் தட்கரே போற்றி

ஓம் ததிகர்ணரே போற்றி

ஓம் தீனர் காவலரே போற்றி

ஓம் தீயோர்க்கு நஞ்சே போற்றி

ஓம் துதிப் பிரியரே போற்றி

ஓம் துன்பம் துடைப்பவரே போற்றி

ஓம் நமனாரின் சேவகரே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி

ஓம் நாகலட்சுமியே போற்றி

ஓம் நாக ராஜரே போற்றி

ஓம் நாக கன்னியரே போற்றி

ஓம் நாடப்படுபவரே போற்றி

ஓம் நாக நாகினியரே போற்றி

ஓம் நாக பஞ்சமித் தேவியே போற்றி

ஓம் நாதத்தில் லயிப்பவரே போற்றி

ஓம் நாதனைப் பணிந்தவரே போற்றி

ஓம் நீள் வடிவினரே போற்றி

ஓம் நொடியில் அருள்பவரே போற்றி

ஓம் பஞ்சமித் தோன்றலே போற்றி

ஓம் பரனருள் பெற்றவரே போற்றி

ஓம் பத்மனே போற்றி

ஓம் பளபளக்கும் மேனியரே போற்றி

ஓம் படை நடுக்குவிப்பவரே போற்றி

ஓம் பலவடிவில் அருள்பவரே போற்றி

ஓம் பால் பிரியரே போற்றி

ஓம் பாடலில் மயங்குபவரே போற்றி

ஓம் பஞ்சபூதத் தேவரே போற்றி

ஓம் பாதாள வாசரே போற்றி

ஓம் புண்ணியரே போற்றி

ஓம் புற்றில் உறைபவரே போற்றி

ஓம் நற்புகழ் படைத்தவரே போற்றி

ஓம் பூஜிக்கப் படுபவரே போற்றி

ஓம் புனிதரே போற்றி

ஓம் பூவுலகோர் தேவரே போற்றி

ஓம் மரத்தடி இருப்பவரே போற்றி

ஓம் மகுடிக்கு அடங்குபவரே போற்றி

ஓம் மகளிர் தேவரே போற்றி

ஓம் மஞ்சளில் மகிழ்பவரே போற்றி

ஓம் நல்மகவு அளிப்பவரே போற்றி

ஓம் மலடு நீக்குபவரே போற்றி

ஓம் மணிபத்ரனே போற்றி

ஓம் மால் ஆசனனே போற்றி

ஓம் மானசையே போற்றி

ஓம் மாலஅருள் பெற்றவரே போற்றி

ஓம் முட்டை ஏற்பவரே போற்றி

ஓம் முக்கியத் தேவரே போற்றி

ஓம் ராகு உடலானவரே போற்றி

ஓம் ருத்ரனுடன் இருப்பவரே போற்றி

ஓம் வாசுகியே போற்றி

ஓம் வளைந்து வருபவரே போற்றி

ஓம் வல்லவரே போற்றி

ஓம் நல்வரம் அருள்பவரே போற்றி

ஓம் தாலி காப்பவரே போற்றி

ஓம் என்குலம் காப்பவரே போற்றி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us