
எம்.ஸ்ரீப்ரியா, திருநகர், மதுரை: *விருப்பம் நிறைவேற திருவிழா நாளில்தான் கோயிலுக்கு செல்ல வேண்டுமா...
இல்லை. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமியில் செல்லலாம்.
கே.ஸ்ரீதிவ்யா, மேல்மலையனுார், விழுப்புரம்: *சில கோயில்களில் மூலவருக்கு அபிேஷகம் செய்வதில்லையே...
சுயம்பு, புற்று, சுதை, குடைவரை கோயில்களில் அபிேஷகம் செய்வதில்லை.
ஆர்.ஸ்ரீவித்யா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: *பஞ்ச தீபத்தை தரிசித்தால்...
கோயிலில் சுவாமிக்கு பூஜையின் போது பஞ்சதீபம் காட்டுவர். இதை தரிசிக்க பாவம் தீரும்.
டி.ஸ்ரீலட்சுமி, பல்லடம், திருப்பூர்: *காய்ச்சலுக்கு என்ன மந்திரம் சொல்லலாம்?
விஷ்ணு சகஸ்ர நாமம், நாராயணீயம் ஸ்லோகத்தை காலை, மாலையில் கேளுங்கள்.
ஆர்.ஸ்ரீநயா, செங்கோட்டை, தென்காசி: *மாமியார், மருமகள் சண்டை அடிக்கடி வருகிறதே... ஏன்?
விட்டுக் கொடுங்கள் அல்லது விலகி இருங்கள்.
வி. ஸ்ரீதன்யா, வத்தலக்குண்டு, திண்டுக்கல்: *கிணற்றை மூடி விட்டு, அதன் மீது வீடு கட்டுகிறார்களே...
மூடிய இடத்தை தவிர, மற்ற இடத்தில் வீடு கட்டலாம்.
பி.ஸ்ரீஜா, சரோஜினிநகர், புதுடில்லி: சரணாகதி என்றால்...
சரணம் - தஞ்சம்.
ஆகதி - அடைதல். கடவுளிடம் தஞ்சம் அடைவது எனப் பொருள்.
எல்.ஸ்ரீஷா, ஊட்டி, நீலகிரி: *அருவுருவ வழிபாடு என்றால் என்ன?
உருவமும், அருவமும் கலந்தது அருவுருவம்.
உ.ம்.: சிவலிங்கம்
பி.ஸ்ரீதா, திருப்போரூர், செங்கல்பட்டு: *எல்லா உயிர்களுக்கும் நவக்கிரகத்தின் தாக்கம் உண்டா?
எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணியம் உண்டு. அதை தருவது நவக்கிரகம்.