
வி.லட்சுமி, ஆவடி, திருவள்ளுர்: பிரச்னை தீர...
ஸ்ரீராமர் படத்தின் முன் விளக்கேற்றி பாலை நைவேத்யம் செய்து சுந்தரகாண்டம் படியுங்கள்.
ஆர்.சந்திரன், பூவரசன்குப்பம், விழுப்புரம்: ராம நாமத்தின் சிறப்பு...
நாராயணா, நமசிவாய என்ற மந்திரத்தில் உள்ள இரண்டாவது எழுத்தின் சேர்க்கை தான் 'ராம' நாமம்.
கே.குமார், சாயல்குடி, ராமநாதபுரம்: நல்லவர்கள் தோல்வி அடைவது ஏன்?
காலம் அவர்களை கைவிடாது. அடுத்த பிறப்பில் வெற்றியாளராக திகழ்வார்கள்.
எம்.உஷா, நத்தம், திண்டுக்கல்: முருகன் வேலை பற்றி...
ஞானம், கருணையின் வடிவம் வேல். அசுரனையும் வாழ வைத்த வேலை வழிபட்டால் எப்போதும் வெற்றியே.
கே.ராஜேஷ், கோவில்பட்டி, துாத்துக்குடி: வம்ச விருத்திகாரன் யார்?
வம்சத்தை விருத்தி செய்பவரான முருகப்பெருமான் தான் அவர்.
என்.பாண்டியன், பூதப்பாண்டி, கன்னியாகுமரி: லட்சிய தம்பதி யார்?
எந்த வயதிலும் அன்பு மாறாமல் வாழ்பவர்கள்.
வி.அபிராமி, கல்யாண்புரி, டில்லி: மகான்கள் படத்தை எங்கு வைக்க வேண்டும்?
பூஜையறையில் வைக்க வேண்டும்.
ஜி.அகிலா, கோத்தகிரி, நீலகிரி: நன்றி மறந்த எனக்கு பரிகாரம் உண்டா?
நன்றி மறந்த பாவத்திற்கு பரிகாரம் இல்லை.

