sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 19, 2026 01:40 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுவஸ்ரீ.ஆர், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர்: நிரந்தர வேலை கிடைக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?

புத்திர்பலம் யசோதைர்யம்

நிர்ப்பயத்வம் அரோகதாம்|

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனுாமத் ஸ்மரணாத் பவேத்||

இதைச் சொல்லி அனுமனை வழிபடுங்கள்.

யோகிதா.கே, திப்பசந்திரா, பெங்களூரு: ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டு?

ஒருவர் தன் சந்ததிக்கு பெற்றோர் ஆக தேவையான காலம். முன்பு 21. தற்போது 27 ஆண்டு.

ஹரிதா.மு, வில்லிவாக்கம், சென்னை: காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்?

கையின் நுனியில் லட்சுமி, நடுவில் சரஸ்வதி, மணிக்கட்டில் பார்வதி ஆகிய மூவரும் உள்ளதால் பார்க்கிறோம்.

லாஸ்யா.எஸ், குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி: வெளியில் புறப்படுபவரை 'எங்கு போகிறீர்கள்' எனக் கேட்பது சரியா...



சரியல்ல. வேலை நடக்காவிட்டால் நீங்களே காரணம் என நினைக்கலாம்.

சாய்சரண்.ஆர், ஆத்தங்குடி, சிவகங்கை: சுவாமியின் முன் எப்போது பூப்போட்டு உத்தரவு கேட்கலாம்?



எந்த நல்ல விஷயத்திற்கும் உத்தரவு கேட்கலாம்.

ஆகாஷ்.எஸ், முக்கூடல், வள்ளியூர்: அம்பிகை உபாசகரின் படத்தை வைத்து வழிபடலாமா?

குருவாக ஏற்றுக் கொண்ட சீடர்கள் வழிபடலாம்.

சரவணன்.டி, மதுக்கரை, கோயம்புத்துார்: நம்பிக்கை துரோகம் செய்தால் பசுவைக் கொன்ற பாவம் சேருமாமே...

பாதிக்கப்பட்டவரின் வேதனையோ சொல்லி மாளாது. பசுவை கொன்ற பாவமும் சேரும்.

அமிர்தா.கே, குளச்சல், கன்னியாகுமரி: காணாமல் போன பொருள் கிடைக்க...

போலீசில் புகார் கொடுங்கள். அத்துடன் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். ''கார்த்தவீர்யார்ஜுனோ நாம

ராஜா பாஹு ஸஹஸ்ரவான்

அஸ்ய ஸம்ஸ்மரணாதேவ

ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே''

சொர்ணா.எம், ஆண்டிபட்டி, தேனி: அடிக்கடி தம்பதிக்குள் சண்டை வந்தால்...

இது சண்டை அல்ல; அன்பால் வரும் ஊடல். மனைவியுடன் உள்ள முருகன் கோயிலில் வெள்ளிதோறும் விளக்கேற்றுங்கள்.






      Dinamalar
      Follow us