தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 19, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்.20 மாசி 8: முகூர்த்த நாள். மதுரை கூடலழகர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்ஸவம். திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் நினைவு நாள்.

பிப்.21 மாசி 9: சதுர்த்தி விரதம். மதுரை கூடலழகர் தங்கச் சிவிகையில் மச்சாவதாரம். வேதாரண்யம் சிவன் புறப்பாடு. திருச்செந்துார், பெருவயல், மருதமலை, திருப்போரூர், காங்கேயம் முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.

பிப்.22 மாசி 10: சஷ்டி விரதம். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள், கும்பகோணம் சக்கரபாணி கோயில் உற்ஸவம் ஆரம்பம். மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சேஷ வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.

பிப்.23 மாசி 11: கார்த்திகை விரதம். திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம் அருளிய காட்சி. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உற்ஸவம் ஆரம்பம். திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் சிவன் பவனி.

பிப்.24 மாசி 12: கோயம்புத்துார் கோனியம்மன், காரமடை அரங்கநாதர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருச்செந்துார் முருகன் தங்கமுத்துகிடா வாகனத்தில் பவனி.

பிப்.25 மாசி 13: காங்கேயம் முருகன், தெய்வானையுடன் திருமணம். மருதமலை முருகன் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

பிப்.26 மாசி 14: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித லீலை. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உற்ஸவம் ஆரம்பம். திருக்கச்சி நம்பி திருநட்சத்திரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us