ADDED : ஜூலை 09, 2026 09:24 AM

கலா.டி, களக்காடு, திருநெல்வேலி: கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்க...
சர்வ ஜன சுகினோ பவந்து' எனச் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.
சங்கர்.பி, ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்: வயது காரணமாக என்னால் விரதமிருக்க முடியவில்லையே...
அசைவம், பூண்டு, வெங்காயத்தை தவிர்த்து உணவு உண்ணுங்கள். பலன் கிடைக்கும்.
நித்தியாமேனன்.கே, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: புலனடக்கம் என்றால்...
ஆசை, கோபம் ஏற்படாதவாறு மனதை அடக்குவது.
சங்கீதா.கு, ராயபுரம், சென்னை: பெற்றோரை வணங்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்ரதி
பத்தயே| ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ||
ராஜன்.கா, சின்னமனுார், தேனி: கணவருக்கு மனைவி திருநீறு பூசலாமா...
கூடாது. உடல்நலம் இல்லாத நிலையில் மட்டும் பூசலாம்.
வரலட்சுமி.வி, நாகர்கோவில், கன்னியாகுமரி: பெண் சாபம் தீர...
கோயிலில் வெள்ளி தோறும் பெண்களுக்கு உணவு, ஆடையை தானம் செய்யுங்கள்.
கணேஷ்.ஆர், காரைக்கால், புதுச்சேரி: நவக்கிரகத்தை தனியாக சுற்றணுமா?
பிரகாரத்தை சுற்றும் போது நவக்கிரகத்தை சுற்றினால் போதும்.
முருகன்.எஸ், மருதமலை, கோயம்புத்துார்: காகம் என் தலையில் தட்டிச் சென்றது. என்ன செய்யலாம்?
தலைக்கு குளியுங்கள். பின்னர் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
பாஸ்கரன்.எம்,கரோல்பார்க், டில்லி: சுவீகார தோஷம் என்றால்...
குழந்தை இல்லாதவருக்கு ஏற்படும் தோஷம் இது. இதற்காக குழந்தையை தத்தெடுப்பர்.
